நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. அதிவேகத்தில் பரவும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறிவருகின்றன. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், தகுந்த இடைவேளியைப் பின்பற்ற வேண்டும் எனவும் மக்களுக்கு அரசுகள் அறிவுறுத்திவருகின்றன.
காலணி வழியாகவும் கரோனா பரவலாம் - சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் புதிய முயற்சி! - bangalore news
பெங்களூரு: கரோனா தொற்று காலணி வழியாகவும் பரவ வாய்ப்புள்ள காரணத்தினால், தானியங்கி சுத்திகரிப்பு இயந்திரம் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதித்த நோயாளி ஒருவர் சாலையில் எச்சில் துப்பும்போது, அதை ஒருவர் தெரியாமல் மிதித்துவிட்டால் கரோனா காலணி வழியாகப் பரவ அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் காலணிகளையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதைக் கருத்தில்கொண்டு, பெங்களூரு சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்த அறங்காவலர் ஸ்ரீதர் என்பவர், காலணிகளை வைத்தால் தானாகவே சுத்திகரிப்பு செய்யும் இயந்திரத்தைத் தயாரித்துள்ளார். இதன்மூலம், காலணியால் கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறுகிறார்.