தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘காவல் ஆணையராக ஒரு நாள்’ - உயிருக்குப் போராடும் 5 சிறார்கள் மகிழ்ச்சி!

பெங்களூரு: உயிருக்குப் போராடிவரும் ஐந்து சிறார்களின் ஆசையை காவல் துறையும், தனியார் அமைப்பு இணைந்து நிகழ்த்தியிருப்பது அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

bangalore

By

Published : Sep 9, 2019, 2:10 PM IST

கர்நாடக தலைநகர் பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பொறுப்பை ஐந்து சிறுவர்கள் இன்று அலங்கரித்துள்ளனர். ஐந்து முதல் 11 வயதுக்கு உள்பட்ட இந்த ஐந்து சிறுவர்களும் உயிருக்கு ஆபத்தான நோய்களின் தாக்கத்தால் அவதிப்பட்டுவருகின்றனர்.

அவர்களின் ஆசையை நிறைவேற்றும்விதமாக பெங்களூரு மாநகர காவல் துறை, ‘மேக் எ விஷ் (Make a Wish)’ அமைப்பு ஆகியவை இணைந்து, அவர்கள் ஐவரையும் மாநகர காவல் ஆணையராக அமரவைத்து அவர்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளது.

ஆணையரான சிறுவர்கள்

அப்போது, ஐந்து பேரையும் ஆணையர் இருக்கையில் அமரவைத்து அவர்களிடம் கையெழுத்து பெற்றுக்கொண்ட காவலர்கள், ஆணையருக்கு வழங்கப்படும் அனைத்து மரியாதையையும் அவர்களுக்கும் வழங்கினர். இதனால் குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்வு அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details