கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள ஜொஹப்பா என்ற பகுதியில் பெங்களூர் குடிநீர் வாரியத்தின் சார்பில் 40 அடி தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று தண்ணீர் தொட்டிக்கு மேற்கூரை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
பெங்களூரில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் மூவர் பலி - தண்ணீர் தொட்டி
பெங்களூர்: ஜொஹப்பா பகுதியில் கட்டப்பட்டு வந்த தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களுரில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து விபத்து
அப்போது திடீரென்று அந்தக் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் தண்ணீர் தொட்டியினுள் இருந்த மூவர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். மேலும் கட்டிடத்தினுள் நான்கு பேர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.