நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. மக்கள் பலரும் முகக் கவசம் அணிந்தும், சானிடைசர் உபயோகித்தும் தான் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். மருத்துவர்களும் செவிலியரும் பிபிஇ கிட் ((Personal Protective Equipment Kit) அணிந்துதான் பணியாற்றி வருகின்றனர். இதனால், நாட்டில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்திற்காக ஏற்றுமதி தடை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், வெளிநாட்டு வர்த்தகர்கள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட்-19 தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை தடை செய்யப்பட்ட பட்டியலிலிருந்து (Personal Protective Equipment Kit) கட்டுப்பாடுகளுடன் ஏற்றுமதி பட்டியலுக்கு மாற்றியுள்ளது. மாதந்தோறும் 50 ஆயிரம் யூனிட்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளோம்.