நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடும் எனக்கூறி டிக்டாக், யூசி பிரவுசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று தடைவிதித்தது. இதனிடையே, தனிநபர் உரிமையைப் பறிக்கும் விதமாக இருக்கும் நமோ செயலிக்கும் தடை விதிக்க வேண்டும் என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் பிரித்திவராஜ் சவான் கோரிக்கை விடுத்துள்ளார்.
'நமோ செயலிக்கும் தடைவிதிக்க வேண்டும்' - மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர்
மும்பை: தனிநபர் உரிமையைப் பறிக்கும் விதமாகச் செயல்படும் நமோ செயலிக்கும் தடைவிதிக்க வேண்டும் என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் பிரித்திராஜ் சவான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பறிக்கும் விதமாக இருக்கும் 59 சீனச் செயலிகளுக்கு மோடி அரசு தடைவிதித்துள்ளது, வரவேற்கத்தக்கது. அதேபோல், நமோ செயலி 22 முக்கியத் தரவுகளைச் சேகரித்து தனியுரிமையைப் பறிக்கிறது. இந்த விவரங்களை அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்களுக்கு அது பகிர்கிறது. எனவே, நமோ செயலிக்கும் தடைவிதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டெர்லிங் பயோடெக்கின் ரூ. 14,500 கோடி பண மோசடி வழக்கு: காங்கிரஸ் பொருளாளரிடம் விசாரணை!