பலுசிஸ்தான் என்பது பாகிஸ்தானில் உள்ள நான்கு மாகாணங்களில் ஒன்று. பல ஆண்டுகளாகவே தனி நாடு கோரிக்கையை பலுசிஸ்தானைச் சேர்ந்த சிலர் எழுப்பி வருகின்றனர். இதன் முக்கிய அரசியல் தலைவர்களை பாகிஸ்தான் ராணுவம் சிறை வைத்துள்ளது. இதனிடையே நேற்று சர்வதேச காணாமல் போனவர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது.
பாகிஸ்தானைப் பிரிக்க இங்கிலாந்தில் ஒலித்த குரல் - வலுக்கும் பலுசிஸ்தான் போராட்டம்! - இங்கிலாந்தில் பலுச்சிஸ்தானுக்கு ஆதரவான குரல்
லண்டன்: பாகிஸ்தான் சிறையில் இருக்கும் பலுச்சிஸ்தான் அரசியல் தலைவர்களை விடுவிக்க, அதன் ஆதரவாளர்கள் இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பலுச்சிஸ்தானுக்கு ஆதரவான இங்கிலாந்து
இதனையொட்டி பலுசிஸ்தான் ஆதரவாளர்கள், பாகிஸ்தான் சிறையில் இருக்கும் அதன் அரசியல் தலைவர்களை விடுவிக்கக் கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை பலுசிஸ்தான் தேசிய இயக்கம் தலைமை தாங்கி நடத்தியது. பலுசிஸ்தான் அரசியல் தலைவர்களை பாகிஸ்தான் ராணுவம் கொடுமைப்படுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேதனை தெரிவித்தனர்.