உத்தரப் பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் ரேஷன் கடையை எங்கு இடம் மாற்றுவது என்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் உள்ளூர் அரசு அலுவர்களும் பங்கேற்றனர்.
அப்போது இருதரப்பினரிடையே கடுமையாக வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் இருதரப்பையும் சமாதானப்படுத்த அலுவலர்கள் முயன்றனர். அப்போது உள்ளூர் பாஜக பிரமுகர் தீரேந்திர சிங், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். இதனால் பொதுமக்கள் அங்கும் இங்கும் ஓடினர். பின்னர் பாஜக பிரமுகர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜெய்பிரகாஷ் பால் என்ற இளைஞர் உயிரிழந்தார். இது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பாஜக உள்ளூர் நிர்வாகியின் சகோதரர் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த அரசு அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங், இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை தேவை எனக் கோரியுள்ளார்.