விமான பாதுகாப்புப் படை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். பாலக்கோட் விமானப்படை தாக்குதல் நினைவுதினத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முப்படைத் தளபதி பிபின் ராவத்தும் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய ராஜ்நாத் சிங், "நமது படைகள் தங்களின் இலக்குகளைச் சரியாக உணர்ந்து பயிற்சி பெற்று சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. தற்போதைய பலத்தைக்கொண்டு நிலம், நீர், வானம் என அனைத்து தளத்திலும் இந்திய ராணுவம் சிறப்பாகச் செயல்படும் உறுதியைக் கொண்டுள்ளது.
பாலக்கோட் தாக்குதல் அதற்குச் சிறந்த உதாரணம். எல்லைக்கு அச்சுறுத்தலாக உள்ள எதிரிகள், பயங்கரவாதிகளை எதிர்த்துப் போரிடும் வல்லமையை இந்திய ராணுவம் சிறப்பாகப் பெற்றுள்ளது" எனத் தெரிவித்தார்.