பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சின்மயானந்தா, தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக 23 வயது சட்டக் கல்லூரி மாணவி சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, அந்த மாணவி மாயமானார். இது தொடர்பாக, வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இதனை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
சின்மயானந்தாவுக்கு முன் ஜாமின் மறுப்பு! - சின்மயானந்தா பாலியல் வழக்கு
லக்னோ: சட்டக் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாஜக மூத்தத் தலைவர் சின்மயானந்தாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு முன் ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
Chinmayanandha
இதற்கிடையே, காணாமல்போன சட்டக் கல்லூரி மாணவியை ராஜஸ்தானிலிருந்து மீட்டு கொண்டுவந்த உத்தரப் பிரதேச காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பாலியல் வழக்கு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், முன் ஜாமின் கோரி சின்மயானந்தா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கீழமை நீதிமன்றத்தை அனுகும்படி உத்தரவிட்டு முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.