பிரபல ராப் பாடகர் பாட்ஷா, புதிதாக வெளியிட்டுள்ள 'பாகல் ஹை' பாடல் யூ-ட்யூப்பில் வெளியான முதல் நாளிலேயே 75 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று புதிய சாதனைப் படைத்தது. இந்தப் பாடலின் சாதனை டெய்லர் ஸ்விஃப்ட், கொரிய இசைக்குழு பி.டி.எஸின் முந்தைய சாதனைகளை முறியடித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த சாதனை குறித்து யூ-ட்யூப் நிறுவனம் முற்றிலுமாக மறுப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், போலி லைக்ஸ், வியூஸ் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதற்காக ராப் பாடகர் பாட்ஷா, 72 லட்சம் செலவழித்ததாகக் கூறப்படுகிறது.
போலி வியூஸ்,லைக்ஸ்... யூ-ட்யூப் சாதனைக்காக 72 லட்சத்தை செலவழித்த ராப் பாடகர்! - பிரபல ரேப் பாடகர் பாட்ஷா,
மும்பை: பிரபல ராப் பாடகர் பாட்ஷா, புதிதாக வெளியிட்ட பாடலுக்கு யூ-ட்யூப்பில் சாதனை படைக்க போலி லைக்ஸ்,வியூஸ் பெற 72 லட்சத்தை செலவழித்துள்ள தகவல் வெளிவந்துள்ளது.

rap
இதுகுறித்து காவல் துறை துணை ஆணையர் நந்தகுமார் தாக்கூர் கூறுகையில், "ராப் பாடகர் ஒரு உலக சாதனை படைக்க விரும்பியுள்ளார். அதற்காக ரூபாய் 72 லட்சத்தை செலவழித்ததை ஒப்புக்கொண்டார். தற்போது பாட்ஷா, முன்பு வெளியிட்ட அனைத்து பாடல்களையும் ஆய்வு செய்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, காவல் துறை பாட்ஷாவிடம் விசாரணை நடத்திய சமயத்தில் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் மறுத்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.