கோவிட்-19 பெருந்தொற்று, மாநிலங்களின் நிதிவளம் குறித்து கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் நமது ஈடிவி பாரத்திடம் விரிவாகப் பேசினார். அப்போது, “பொருளாதாரத்தின் நிலை, வேலையின்மை ஆகியவை கரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலகில் பணப்புழக்கத்தில் ஏற்படும் கடுமையான வீழ்ச்சி குறித்து சிந்திக்கவைக்கிறது.
கேரளா 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பை அறிவித்து ஊரடங்கை அமல்படுத்தியது. கடன் வாங்குவதற்கு முன்பு சில முன்னேற்பாடுகள் அவசியம். அப்படித்தான் நாங்கள் பணம் திரட்டுகிறோம். ஆனால் அதே நேரத்தில், அத்தியாவசியமற்ற செலவுகளை ஒத்திவைத்தல் அல்லது குறைத்தல் உள்ளிட்ட சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
பெருந்தோட்டத் துறை மோசமான சூழ்நிலையில் உள்ளது. தேங்காய், சில்லறை தொழில்களும் பெரும் பாதிப்படைந்துள்ளன.
பணவீக்கத்திற்குப் பயப்பட வேண்டாம்
மத்திய அரசு பெட்ரோலிய பொருள்களின் விலையைக் குறைத்து, நிறுவனங்களுக்கு வரி குறைக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். தேவையை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு, மக்களின் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்" என்றார்.
மாநிலத்தில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதில் கேரளாவை முன்மாதிரியாக்குவது குறித்து பேசிய தாமஸ் ஐசக், “சுகாதாரத்தில் தரத்தை வளர்த்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியமாகும். அரசியல் ரீதியாக உள்ளாட்சிகளுக்கான நிதியைக் குறைக்க முடியாது” என்று கூறினார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸை எதிர்த்து போராடும் தடுப்பூசி வகைகள்
!