காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் குல்காம் ரபானி. நிறைமாத கர்ப்பிணியான இவரது மனைவியை ஆஷா பணியாளர் சாதியா பேகம் உதவியுடன் பிரசவத்திற்காக நரிகோட் பகுதிக்கு அழைத்துச் செல்ல ஆவன செய்ய முயன்றார்.
காஷ்மீரில் ராணுவத்தினர் உதவியுடன் பிறந்த அழகிய பெண் குழந்தை - ராணுவத்தினர் உதவியுடன் பிறந்த அழகிய பெண் குழந்தை
காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக உரிய நேரத்தில் பிரசவ சிகிச்சைக்குச் செல்ல முடியாத கர்ப்பிணிக்கு ராணுவத்தினர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
![காஷ்மீரில் ராணுவத்தினர் உதவியுடன் பிறந்த அழகிய பெண் குழந்தை Baby girl born in Army vehicle amid poor conditions in J-K](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10466331-289-10466331-1612220848069.jpg)
ஆனால், காஷ்மீரில் நிலவிய பனிப்பொழிவின் காரணமாக உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வர இயலாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், அப்பெண்ணிற்குப் பிரசவ வலி எடுக்கவே, ஆஷா பணியாளர் அருகிலிருந்த ராணுவ மருத்துவக் குழுவை உதவிக்கு அழைத்தார். பின்னர், அப்பகுதியில் நிலவும் பனிமூட்டத்தின் காரணமாக ராணுவ வாகனத்திலேயே பிரசவம் பார்க்கும் முடிவிற்கு வந்தனர்.
இதற்கிடையில், கர்ப்பிணி ராணுவத்தினர் மற்றும் ஆஷா பணியாளர் உதவியுடன் ராணுவ வாகனத்திலேயே அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தொடர்ந்து தாய், சேய் இருவரும் நரிகோட்டிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.