தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி - பெங்களூரு: விமானத்தில் பிறந்த குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்...! - டெல்லி - பெங்களூரு

பெங்களூரு: டெல்லியிலிருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணித்த பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் விமானத்தில் இலவசமாக பயணிக்கும் சலுகைகள் வழங்கப்படவுள்ளது.

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஊழியர்கள்..!
விமானத்தில் பிறந்த குழந்தைக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஊழியர்கள்..!

By

Published : Oct 8, 2020, 2:18 PM IST

Updated : Oct 8, 2020, 2:41 PM IST

டெல்லியிலிருந்து பெங்களூருவுக்கு நேற்று (அக்.7) மாலை இண்டிகோ விமானம் ஒன்று சென்றது. அந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும் பயணித்தார். அப்போது அப்பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு விமானத்தில் இருந்த மருத்துவக் குழுவினர்கள் பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு விமானத்திலேயே அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும்-சேயும் நலமுடன் உள்ளனர்.

இந்நிகழ்வுகளுக்கு இடையே இரவு 7.30 மணிக்கு விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையடுத்து விமான நிலையத்தில் தாய்க்கும்- சேய்க்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஊழியர்கள்..!

இந்நிலையில், இண்டிகோ விமானத்தில் குழந்தை பிறந்துள்ளதை முன்னிட்டு அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இண்டிகோ விமானத்தில் இலவசமாக பயணிக்கும் சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க..தமிழ் பெயர்களை கண்டு வியந்த கன்னட தம்பதி

Last Updated : Oct 8, 2020, 2:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details