உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹப்பூர் மாவட்டத்தில், ரகுநாத்பூர் கிராமத்தில் வசித்துவரும் பெண் ஒருவருக்கு, ஏப்ரல் 9ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கு உத்தரவால் பொது போக்குவரத்து இல்லாத காரணத்தினால், சுமார் 10 கி.மீட்டரில் உள்ள மத்னாபூர் சுகாதார மையத்திற்கு, அப்பெண்ணை கணவர் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
அந்தத் தம்பதி சிக்கந்தர்பூரைத் தாண்டி சென்றுகொண்டிருக்கும்போது, பெண்ணிற்குப் பிரசவ வலி அதிகமாகி, சாலையிலேயே அழகியப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதைப் பார்த்த அப்பகுதியைச் சென்ற நபர் ஒருவர், காவல் துறைக்குத் தகவல் அளித்தார்.