அயோத்தியில் உள்ள பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கர சேவகர்களால் இடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக குற்றவியல் சட்டப்பிரிவு 313இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரின் வாக்குமூலங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் பதிவு செய்துவருகிறது. ஜூலை 23ஆம் தேதி பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியும், ஜூலை 24ஆம் தேதி அத்வானியும் தங்களது வாக்குமூலத்தைப் பதிவுசெய்ய சிறப்பு நீதிபதி எஸ்.கே. குப்தா உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விசாரணையை முடிப்பதற்காக, அன்றாடம் விசாரணைகளை நடத்திவரும் சிபிஐ நீதிமன்றம், ஜூலை 22ஆம் தேதி சிவசேனா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதீஷ் பிரதானைக் காணொலி மூலம் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.