இது தொடர்பாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் மௌலானா வாலி ரஹ்மானி தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், " யாரும் மனம் உடைந்துப் போக வேண்டிய அவசியமில்லை. நம் நாட்டின் நீதி பரிபாலத்தின் மிக உயர்ந்த உச்ச நீதிமன்றத்தின் மேலான தீர்ப்பை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
நாம் பிறந்த நமது தாய்நாடான இந்திய நாட்டை நேசிக்கிறோம். பாபர் மசூதியை விட, மிக அதிகமாக இந்த நாட்டை நேசிக்கிறோம். இருப்பினும், இது தீர்ப்பை நீதியற்ற நியாயமற்ற தீர்ப்பு என்று தான் நாங்கள் நிச்சயமாக கூறுவோம். இந்திய இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதியாகவும், பொது தளமாகவும் இருந்து பாபரி மசூதியின் நீதிக்கான போராட்டத்தில் நாம் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை" என அவர் கூறினார்.