உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கர சேவகர்களால் இடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக குற்றவியல் சட்டப்பிரிவு 313இன் கீழ் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் விசாரணை நடத்திவருகிறது. இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதையடுத்து வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: வாக்குமூலம் அளிக்கும் முரளி மனோகர் ஜோஷி!
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளி மனோகர் ஜோஷி இன்று சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்கிறார்.
இந்நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 32 பேரின் வாக்குமூலங்களை காணொலிக் காட்சி மூலம் நீதிமன்றம் பதிவு செய்துவருகிறது. அந்த வகையில் இன்று (ஜூலை 23ஆம் தேதி) பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யவுள்ளார்.
இதன் பின்னர், நாளை (ஜூலை 24ஆம் தேதி) பாஜக மூத்த தலைவர் அத்வானி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்கிறார். முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங், தனது வாக்குமூலத்தில், தன்னுடைய பதவிக்காலத்தில் இந்தச் சம்பவம் நடந்ததால், தனக்கு எதிராக தவறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்வைத்ததாகக் குற்றஞ்சாட்டினார்.