லக்னோ (உத்தர பிரதேசம்): சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை காணொலி காட்சி மூலம் கையாளும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விசாரணை முடித்து, ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி முடிவதாக இருந்த விசாரணை, கரோனா நோய்க் கிருமித் தொற்று பரவலின் காரணமாக தாமதமானது.
பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வெடித்த கலவரத்தால் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி அப்போதைய உத்தரபிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங், வினய் கத்தியார், விஹெச்வி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.