ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் யோகா தினம் நிகழ்ச்சியை சிறப்பிப்பதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி நாளை நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்.
'யோகா செய்யாதவன் ரத்தம் கக்கி சாவான்' - சாபம் விட்ட ராம்தேவ் - யோகா செய்தல் நல்லது
மகாராஷ்டிரா: 'யோகா செய்தால் கடவுள் பாக்கியம் கிடைக்கும் இல்லையென்றால் சபிக்கப்படுவீர்கள்' என்று பாபா ராம்தேவ் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், மகராஷ்டிராவில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'காங்கிரஸ் ஆட்சியில் யோகாவுக்கென்று தனிச் சிறப்புகள் எதுவும் செய்யவில்லை. நேரு, இந்திரா யோகா பயிற்சியை ரகசியமாக செய்தனர். அவர்களை பின்தொடர்ந்து வழி வந்த நேரு குடும்பத்தினர் யோகாவை புறக்கணித்தனர். பாஜக ஆட்சியில்தான் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. யோகா செய்வது மிகவும் நல்லது. எம்எல்ஏக்கள் எம்பிக்களும் யோகா செய்ய வேண்டும். யோகா செய்தால் கடவுள் அருள் புரிவார். யோகா செய்யாவிட்டால் சபிக்கப்படுவீர்கள். மோடிதான் மக்களோடு மக்களாக யோகா தினத்தை கொண்டாடினார்' என்று அவர் தெரிவித்தார்.