இந்திய பெரும் பணக்காரர்களில் ஒருவரும், விப்ரோ குழுமத்தின் தலைவருமான அசீம் பிரேம்ஜி, ஆண்டுதோறும் நன்கொடைகளை வாரி வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
ரூ 52,750 கோடி நன்கொடை... சமூக பணிகளுக்காக வாரி வழங்கும் அசீம் பிரேம்ஜி! - wipro industries
மும்பை: சமூகப் பணிகளுக்காக ரூ. 52,750 கோடி நன்கொடை வழங்குவதாக விப்ரோ குழுமத்தின் தலைவர் அசீம் பிரேம்ஜி அறிவித்துள்ளார்.
azim premji
அந்த வகையில், அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல், அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட சமூகப் பணிகளுக்காக 52 ஆயிரத்து 750 கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாக அசீம் பிரேம்ஜி அறிவித்துள்ளார்.
இதன்மூலம், அவர் தற்போது நன்கொடையாக வழங்கியுள்ள தொகையின் மதிப்பு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.