நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதா குறித்து ஜூலை 25ஆம் தேதி விவாதம் நடைபெற்றது. அப்போது, பீகார் மாநில எம்.பி ரமா தேவி தற்காலிக சபாநாயகராக இருந்தார். அந்த சமயத்தில் அவர் மசோதா குறித்த ஆணை ஒன்றை வாசித்தார். அதை எதிர்த்துப் பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.பி அசாம் கான் ரமா தேவியை பாலியல் ரீதியான முறையில் கேலி செய்தார்.
இதனை எதிர்த்து கட்சி பேதமின்றி அனைத்து பெண் எம்.பி-களும் அசாம் கானுக்கு எதிராகக் குரல் எழுப்பினர். பின்னர், சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அசாம் கான் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும், அசாம் கானின் சர்ச்சைக்குரிய பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.