அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பு தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க உத்தரப் பிரதேச தலைமைச் செயலர் அனுப் சந்திரா பாண்டே, காவல் துறை தலைமை இயக்குநர் ஓம் பிரகாஷ் சிங் ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அழைப்பு விடுத்துள்ளார்.
காவல் துறையினர், மாவட்ட நீதிபதிகள் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு குறித்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீடியோ கான்பரன்சிங் மூலம் கேட்டறிந்தார்.
அவசர உதவிக்காக லக்னோ, அயோத்தியா ஆகிய நகரங்களில் இரண்டு ஹெலிகாப்டர் நிற்கவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள தேவையான அனைத்து உத்தரவுகளையும் முதலமைச்சர் பிறப்பித்துள்ளதாகக் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தின் தன்னாட்சியில் தலையிடுகிறதா மத்திய அரசு?