அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடந்தது. தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அத்தொகுதி எம்.பி. லல்லு சிங் கூறினார். இது குறித்து ஈடிவி பாரத்திடம் அவர் பேசுகையில், “கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் பல மாதங்கள் தாமதம் ஆகலாம். எனினும் தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் அளிக்கப்படும். மேலும் ராமர் கோயில் தவிர, கடந்த 28 ஆண்டுகளாக மூடப்பட்டு பாழடைந்த நிலையில் உள்ள மனஸ் பவனிலும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
முன்னதாக நேற்று அயோத்தியில் உள்ள ராம் லல்லா சிலை தற்காலிக புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்ட விழாவில், கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படாததாக குற்றச்சாட்டு எழுந்தது.