அயோத்தி விவகாரம் பல தசாப்தங்களாக நடந்து வந்தது நாம் அறிந்ததே. அந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இனியாவது மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள் என்று பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் அறிவுரை வழங்கியுள்ளது. இதுகுறித்து கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடாங்கர் (Girish chodankar) கூறியதாவது,
பா.ஜனதா ஒவ்வொரு தேர்தலிலும் அயோத்தி விவகாரத்தை எழுப்பிவந்தது. தற்போது அந்த பிரச்னைக்கு நீதிமன்றம் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இப்பிரச்னையை அரசியல் வாக்கு வங்கி அரசியலுக்காக இழுத்தடிக்காமல், தீர்வுக்கான வழியை தேடுங்கள். பிரதமர் நரேந்திர மோடி சாதாரண மக்களுக்கு நல்ல நாட்களை (அச்சே தீன்) கொடுப்பேன் என்றார்.