தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடிக்கு ராக்கிகளை உருவாக்கிய இஸ்லாமிய பெண்கள் - ராமர் கோவில் பூமி பூஜை

அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அயோத்தில் உள்ள இஸ்லாமிய பெண்கள் ராக்கிகளை உருவாக்கியுள்ளனர்.

rakhis made by muslim women
rakhis made by muslim women

By

Published : Jul 31, 2020, 10:45 AM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரதமர் மோடியை வரவேற்க இஸ்லாமியர்கள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் ஆகியோருக்காக அயோத்தியில் உள்ள இஸ்லாமிய பெண்கள் ராக்கிகளை உருவாக்கியுள்ளனர்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். விழாவையொட்டி அயோத்தி நகரமே விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. இதற்கிடையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த அறக்கட்டளை மூலம் ராக்கிகளை ராம் லாலாவுக்கு இஸ்லாமிய பெண்கள் வழங்குவார்கள்.

ABOUT THE AUTHOR

...view details