அயோத்தி வழக்கில் வக்ஃபு வாரியத்திற்காக வாதாடக் கூடாது என்று சென்னையைச் சேர்ந்த முன்னாள் பேராசிரியர் சண்முகம் தனக்கு கடிதம் அனுப்பியிருந்தாக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அயோத்தி வழக்கு: முன்னாள் பேராசிரியர் சண்முகத்திற்கு நோட்டீஸ் - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
டெல்லி: அயோத்தி வழக்கு விசாரணையில் வக்ஃபு வாரியத்திற்காக வாதிடும் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவனுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க சென்னையைச் சேர்ந்த முன்னாள் பேராசிரியர் சண்முகத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ayodhya-land
அரசியல் சாசன அமர்வில் நடக்கும் இந்த விசாரணையை அவமதிக்கும் வகையில், தனக்கு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பிய முன்னாள் பேராசிரியர் சண்முகம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராஜீவ் தவான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக முன்னாள் பேராசிரியர் சண்முகம் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.