தொடர்ந்து நான்காவது நாளாக அயோத்தி வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான ராஜீவ் தவான், "வாரத்தின் ஐந்து நாட்களிலும் அயோத்தி வழக்கின் விசாரணை நடைபெறும் என வதந்தி பரப்பப்படுகிறது. இதற்கு நான் ஆட்சேபனை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவசரப்படுத்தப்படுகிறதா அயோத்தி வழக்கு?
டெல்லி: வாரத்தின் ஐந்து நாட்களிலும் அயோத்தி வழக்கின் விசாரணை நடைபெறுவதற்கு இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
SC
வாரத்தின் ஐந்து நாட்களிலும் விசாரணை நடைபெற்றால் என்னால் நீதிமன்றத்திற்கு உதவ முடியாது. விசாரணையை அவசரப்படுத்தி நடத்தக் கூடாது. அப்படி நடந்தால் நான் வழக்கிலிருந்து வெளியேறிவிடுவேன்" என்றார்.
இதனைக் கேட்ட நீதிபதி ரஞ்சன் கோகாய், "உங்கள் குறைகளை கேட்டறிந்தோம். இதுபற்றிய எங்கள் கருத்து உங்களுக்கு விரைவில் தெரிவிக்கப்படும்" என்றார்.
Last Updated : Aug 9, 2019, 2:34 PM IST