சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்கு சொந்தம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மசூதி கட்ட இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ். அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.