அயோத்தி ராமர் கோயில் அமைப்பது தொடர்பான தற்காலிக பணிகளை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை முன்னெடுத்துள்ளது.
இந்தப் பணிகளில் 2 ஜேசிபி இயந்திரங்கள் உள்பட 40 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பணிகள் 23 நாட்களுக்குள் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
இதனால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி விசுவ இந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா கூறுகையில், “மக்கள் வழிபாட்டு தலத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாது என்பதை உறுதி செய்ய இந்த தற்காலிக கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.