தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அக்.18க்குள் அயோத்தி வழக்கு வாதங்களை முடிக்க வேண்டும்' - செக் வைத்த உச்ச நீதிமன்றம்! - அக்.18க்குள் அயோத்தி வழக்கு வாதங்களை முடிக்க வேண்டும்

புதுடெல்லி: அயோத்தியில் ராம ஜென்மபூமி - பாபர் மசூதி நில பிரச்னையை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கு தொடர்பான அனைத்து வாதங்களையும் அக்டோபர் 18ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

By

Published : Sep 26, 2019, 1:15 PM IST

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி நில பிரச்னையில் சம்பந்தப்பட்ட வாரியம் சமமாக பகிர்ந்து கொள்ள 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இப்பிரச்னைக்குத் தீர்வு காண 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்திருந்தது. ஆனால், மத்தியஸ்த குழுவால் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அக்டோபர் மாதம் 18ஆம் தேதிக்குள் அயோத்தி வழக்கு தொடர்பான அனைத்து வாதங்களையும் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


இதையும் படிங்க: ’எட்டு வழி சாலை தீர்ப்பு; உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்வேன்’ - அன்புமணி ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details