சமூக அளவிலும், அரசியல் ரீதியாகவும் தீர்க்க முடியாத பிரச்னையாக அயோத்தி விவகாரம் பல காலமாக இருந்து வருகிறது. இதனை சுமூகமாக தீர்க்க மார்ச் மாதம் மத்தியஸ்தர் குழுவினை அமைத்து எட்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த குழுவில் உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கய்ஃபூல்லா, ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பன்சு ஆகியோர் இடம்பெற்றனர்.
அயோத்தி விவகாரம் : மத்தியஸ்தர் குழு அறிக்கை மீது உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை - AYODHYA CASE HEARING TOMORROW
டெல்லி: அயோத்தி விவகாரத்தை சுமூகமாக தீர்க்க அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் அறிக்கை மீதான விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
அயோத்திய விவகாரம்
மத்தியஸ்தர் குழு அயோத்திய விவகாரத்தில் சம்பந்தபட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து அவர்களின் கருத்தை கேட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் கொடுத்த எட்டு வார கால அவகாசம் மே 3ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்நிலையில் மத்தியஸ்தர் குழுவானது தங்களின் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யதது. இந்த அறிக்கையின் மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமயிலான அமர்வின் முன்பாக நாளை நடைபெற உள்ளது.