உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா அமைப்புகள் பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமியர் தரப்பு வாதத்தை அக்டோபர் 15ஆம் தேதி நிறைவு செய்யவும், அடுத்த இரண்டு நாட்களில் இந்துக்கள் தங்களின் வாதத்தை நிறைவு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில் இருந்த இடத்தில் மசூதி கட்டியது பாபர் செய்த வரலாற்றுத் தவறு என்று வாதிட்டார்.
அயோத்தியில் முஸ்லீம்கள் தொழுகை நடத்த 55 மசூதிகள் இருப்பதாகவும், ராமர் பிறப்பிடம் ஒன்றுதான் என்றும், அதை இந்துக்களால் மாற்ற முடியாது என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.