அயோத்தியில் ராமர் கோயில் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெறவுள்ளது. அதன் முதல் கட்டமாக ராம் லல்லாவிலுள்ள ராமர் கோயில் சிலை, தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கோயிலுக்கு (மனஸ் பவன்) பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இதற்கான பூஜையில் குறைந்த அளவு மதத் தலைவர்களே கலந்துகொள்வார்கள் என கோயில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதற்கான பூஜைகள் உள்ளிட்ட பணிவிடைகள் இன்று தொடங்கின. இதையடுத்து ராமர் சிலை தற்காலிக கோயிலுக்கு வருகிற 25ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மாற்றப்படும்.
முன்னதாக டெல்லி, பிரயாக்ராஜ், வாரணாசி மற்றும் அயோத்தியைச் சேர்ந்த பதினைந்து வேத பூசாரிகள் ராம ஜென்ம பூமியிலிருந்து மனஸ் பவன் வரையிலான முழு வழியையும் சுத்தம் செய்தனர். இதையடுத்து கருவறையை சுத்தம் செய்யப்படும் என்று தலைமை பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் தெரிவித்தார்.