ஜம்மு காஷ்மீர் அவந்திபோரா டிரால் பகுதியைச் சேர்ந்தவர் ஆதில் அகமது ஹஜாம். இவர், ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்துள்ளார்.
இந்நிலையில் அவரை காவலர்கள் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட அகமது, அப்பகுதியில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம், தளவாடங்கள், போக்குவரத்து உள்ளிட்ட பல உதவிகளை வழங்குவதில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.