காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள், சுற்றுலா சென்றுள்ள பயணிகள் பாதுகாப்பாக விரைந்து தங்களது பகுதிகளுக்கு செல்ல மத்திய அரசு அறிவுறுத்தியது. பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கவும், கண்காணிக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அறிவித்திருந்தது.
காஷ்மீருக்கு போகாதீங்க! குடிமக்களை எச்சரித்த பிரிட்டன், ஜெர்மனி - காஷ்மீர்
ஸ்ரீநகர்: இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு செல்ல வேண்டாம் என தங்கள் நாட்டு மக்களை ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகள் எச்சரித்துள்ளன.
காஷ்மீர்
இந்நிலையில், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளின் அரசு அந்நாட்டு மக்களை காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தானின் எல்லைப்பகுதிகள், ஜம்மு காஷ்மீரின் நகரப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கும் மக்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.