தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் நாள்தோறும் 80 கொலைகளும் 91 வன்புணர்வுகளும் நடந்தன - தேசிய குற்ற ஆவண காப்பகம் - தேசிய குற்ற ஆவண காப்பகம் 2018 அறிக்கை

2018ஆம் ஆண்டில் நாள்தோறும் சராசரியாக 80 கொலைகளும் 289 கடத்தல்களும் 91 பாலியல் வன்புணர்வுகளும் நிகழ்ந்ததாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

NCRB Data
NCRB Data

By

Published : Jan 10, 2020, 11:43 AM IST

இது தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட தகவலின்படி, 31,32,954 இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) குற்றங்களும் 19,41,680 சிறப்பு மற்றும் உள்ளூர் சட்ட (Special and Local Laws) குற்றங்கள் என மொத்தம் 50,74,634 குற்றங்கள் (Cognizable Crimes) இந்தியா முழுவதும் 2018ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது 2017இல் பதிவான 50,07,044 வழக்குகளைவிட அதிகம். காவல் நிலைய அலுவலர் எந்தவொரு மாஜிஸ்திரேட்டின் உத்தரவு இல்லாமல் விசாரிக்கலாம் என்ற குற்றங்கள் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டில் மொத்தம் 29,017 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2017ஐ விட 1.3 விழுக்காடு (2017 - 28,653 வழக்குகள்) அதிகம். பதிவுசெய்யப்பட்ட கொலை வழக்குகளில் Disputes எனப்படும் 'தகராறுகள்' (9,623 வழக்குகள்) ஏற்பட்டவைதான் அதிகம். அதைத்தொடர்ந்து, தனிப்பட்ட பகைக்காக 3,875 கொலை வழக்குகளும் ஆதாயத்திற்காக 2,995 கொலைகளும் நடந்துள்ளன.

2018இல் கடத்தல் வழக்குகள் 10.3 விழுக்காடு அதிகரித்து 1,05,734 ஆகியுள்ளது. இது 2017ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட 95,893 வழக்குகளை விட அதிகம். கடத்தப்பட்ட 1,05,536 (24,665 ஆண்கள் மற்றும் 80,871 பெண்கள்) நபர்களில் 63,356 பேர் (15,250 சிறுவர்கள் மற்றும் 48,106 சிறுமிகள்) குழந்தைகள். 42,180 (9,415 ஆண்கள் மற்றும் 32,765 பெண்கள்) இளைஞர்கள் ஆகும்.

2018ஆம் ஆண்டில், கடத்தப்பட்டவர்களில் 91,709 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், 428 பேர் கொல்லப்பட்டதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு 3,78,277 பெண்களுக்கு எதிரான குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2016 (3,38,954), 2017 (3,59,849) ஆகிய ஆண்டுகளைவிட அதிகம். 33,356 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஒட்டுமொத்த குற்ற எண்ணிக்கை 2017ஐ விட (50,07,044 வழக்குகள்) 1.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. இருப்பினும், ஒரு லட்சம் மக்களுக்கு ஏற்படும் குற்ற விகிதம் 2017இல் 388.6 இருந்து 2018இல் 383.5 ஆக குறைந்துள்ளது. இவ்வாறு தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: குஜராத்தில் ஐஎஸ் பயங்கரவாதி கைது - நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details