தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் ஆட்டோ வாடகை உயர்த்தப்படும் என அறிவிப்பு! - Autorickshaw fares

டெல்லி: ஆட்டோ வாடகை ஒரு கி.மீ.,க்கு ரூ.8 லிருந்து ரூ.9.50க்கு உயர்த்தப்படும் என டெல்லி போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் பாதிக்கப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Autorickshaw

By

Published : Jun 13, 2019, 9:23 PM IST

தலைநகர் டெல்லியில் ஆட்டோ வாடகை 18.75 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த புதிய மீட்டர் கட்டண உயர்வால் முதலில் இரண்டு கி.மீ.,க்கு 25 ரூபாய் என இருந்த நிலையில், தற்போது 1.5 கி.மீ.,க்கு என மாறியுள்ளது. இதனால் நகரில் 90,000 ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி 2019 மார்ச் 8ஆம் தேதி கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்திருந்தது. இது தவிர, ஆட்டோவில் காத்திருப்புக் கட்டணத்தையும் அதிகரித்திருந்தது. அதன்படி, அரை மணி நேர காத்திருப்புக்கு ரூ.30 வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது காத்திருப்பின்போது ஒவ்வொரு நிமிடத்திற்கும் 75 பைசாவை அரசு அதிகரித்துள்ளது. இதனால் டெல்லி நகரில் உள்ள 90,000 ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

மேலும், இரவு காத்திருப்புக் கட்டணத்திலும், லக்கேஜ் கட்டணத்திலும் எவ்வித மாற்றமும் இல்லாமல், முன்பு இருந்த அதே கட்டணம் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details