ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கி முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவர்களை விசாரணை அமைப்புகள் திட்டமிட்டு குறிவைப்பதாக பலர் குற்றம்சாட்டினர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த பொது நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், "நாடாளுமன்றத்தையும், அதன் செயல்பாடுகளையும் நாம் மதிக்க வேண்டும்.
தன்னாட்சி நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் - மன்மோகன் சிங்
ஜெய்பூர்: உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
Manmohan singh
கூட்டாட்சி அமைப்பை கொண்ட இந்தியா போன்ற நாடுகளில், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், சிபிஐ ஆகிய தன்னாட்சி நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அரசியலமைப்புக்கு உட்பட்டு அனைத்தும் நடக்க வேண்டும்" என்றார். முன்னதாக, அரசியல் காழ்ப்புணர்ச்சியை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மன்மோகன் சிங் அறிவுரை கூறியது குறிப்பிடத்தக்கது.