தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் நரேந்திர மோடியுடன் சமோசாக்களை பகிர விரும்பும் வெளிநாட்டுப் பிரதமர் - நரேந்திர மோடி ஸ்காட் மோரிசன்

பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் சமைத்த சமோசாக்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்து ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் ட்விட்டரில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன்
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன்

By

Published : May 31, 2020, 9:29 PM IST

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் விடுமுறை தினமான இன்று, மாம்பழ சட்னியுடன் கூடிய சைவ சமோசாக்களைத் தானே சமைத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் தான் சமைத்த சமோசாக்களை பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாம்பழ சட்னியுடன் சண்டே சமோசாக்கள். சட்னி உள்பட, இவை அனைத்தும் முழுமையாக என்னால் தயாரிக்கப்பட்டவை.

இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியுடனான எனது சந்திப்பு வீடியோ லிங்க் மூலம் நடைபெற உள்ளது. அவர் ஒரு சைவ உணவாளர். அவர் இருந்திருந்தால் சமோசாக்களை அவருடன் பகிர்ந்து கொண்டிருப்பேன்" என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தின்பண்டங்கள் நிரம்பிய தட்டை ஸ்காட் மோரிசன் வைத்திருக்கும் இந்த புகைப்படம், இணையத்தில் தற்போது அதிகம் லைக் செய்யப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியும், ஸ்காட் மோரிசனும் கலந்துகொள்ளவிருக்கும் விர்ச்சுவல் மீட்டிங் வருகிற ஜூன் நான்காம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :'ஏழைகளின் வலியை விளக்க வார்த்தைகள் இல்லை' - பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

ABOUT THE AUTHOR

...view details