உத்தரப்பிரதேச மாநிலம் அவுரியா பகுதியில் இன்று இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 15 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் அம்மாநில அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
உ.பி. லாரி விபத்து: காவல் ஆய்வாளர்களை பணியிடை நீக்கம் செய்த யோகி ஆதித்யநாத் - யோகி ஆதித்யநாத்
லக்னோ: அவுரியாவில் இரு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் 24 தொழிலாளர்கள் உயிரிழந்தையடுத்து அதுதொடர்பாக இரண்டு காவல் ஆய்வாளர்களை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

auraiya-accident-cm-yogi-suspends-two-sho
இந்த விபத்து குறித்து அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்துவரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இதுதொடர்பாக ஃபதேபூர் சிக்ரி பகுதி காவல் ஆய்வாளரையும், கோசி கலா பகுதி காவல் ஆய்வாளரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
இதையும் படிங்க:தெலங்கானாவில் லாரி மீது கார் மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு!