தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - ram temple

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு இதோ...

news today
news today

By

Published : Aug 5, 2020, 6:13 AM IST

காஷ்மீரின் சிறப்பு தகுதி நீக்கப்பட்ட நாள்:

காஷ்மீரின் சிறப்பு தகுதி நீக்கப்பட்ட நாள்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கும் சட்டப்பிரிவு 370 கடந்த ஆண்டு இதே நாள் நீக்கப்பட்டது. இன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது என உள்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சியோமி டிவி ஸ்டிக் அறிமுகம்:

சியோமி டிவி ஸ்டிக் அறிமுகம்

சியோமி நிறுவனம் தனது எம்ஐ டிவி ஸ்டிக்கை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

ராமர் கோயில் பூமி பூஜை:

ராமர் கோயில் பூமி பூஜை

அயோத்தியில் இன்று ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாபநாசம், சேர்வலாறு அணைகளில் தண்ணீர் திறப்பு:

பாபநாசம், சேர்வலாறு அணைகளில் தண்ணீர் திறப்பு

விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று இன்று (ஆகஸ்ட் 5) முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று முதல் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை வலுவடையும்:

தென்மேற்கு பருவமழை வலுவடையும்

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று 19 மாவட்டங்களில் பலத்த மழைக்கான வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details