முதலமைச்சர் இன்று வேலுார் பயணம்
முதலமைச்சர் இன்று (ஆக. 19) முதல், பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று, அங்கு மேற்கொள்ளப்பட்ட, கரோனா தடுப்பு பணிகள் குறித்து, ஆய்வு செய்துவருகிறார். அதன்படி இன்று (ஆக. 19) வேலூர் மாவட்டம் செல்கிறார்.
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் !
பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர்களுடன் காணொலி காட்சியின் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் இன்று கடற்படை தளபதிகளின் 3 நாட்கள் மாநாடு தொடக்கம்- ராஜ்நாத்சிங் பங்கேற்பு...!