ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வருகின்ற ஜூன்19ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பணபேரத்தின் மூலம் பாஜக வாங்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதில் முனைப்பு காட்டிவருகிறது.
பணபேரம் மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சி! - மகேஷ் ஜோஷி
ஜெய்ப்பூர்: ஆட்சியை கவிழ்க்கும் விதமாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை இழுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காங்கிரஸ் கொறடா மகேஷ் ஜோஷி குற்றஞ்சாட்டியுள்ளார்.
mahesh joshi
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவும் எம்.எல்.ஏவுமான மகேஷ் ஜோஷி ஊழல் தடுப்பு அமைப்பின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க எங்கள் எம்.எல்.ஏக்கள், எங்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய சுயேட்சை எம்.எல்.ஏக்களை பணபேரத்தின் மூலம் இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை ஆதாரப்பூர்வமாக நான் அறிந்துகொண்டேன். இந்திய அரசியலமைப்புக்கு எதிராக செயலாற்றும் அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.