ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தின் பாரி என்ற இடத்தில் 30 வயது பெண் ஒருவர் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து ஒரு கார் வந்துள்ளது.
இந்நிலையில், காரிலிருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அப்பெண்ணை கடத்த முயன்றுள்ளனர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அந்தப் பெண்ணை கடத்தல் கும்பலிடமிருந்து மீட்டனர்.