ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அரிஹல் கிராமத்தில் நின்றிருந்த பாதுகாப்புப் படை வாகனம் மீது ஐ.இ.டி. ரக வெடிகுண்டை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்புப் படை வாகனம் மீது தாக்குதல் - ஐந்து வீரர்கள் காயம் - five solders injuired
புல்வாமா: ஜம்மு- காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர்.
ராணுவ வாகனம் மீது தாக்குதல்
இந்தத் தாக்குதலில் ஐந்து பாதுகாப்புப்படை வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த பாதுகாப்புப் படை வீரர்களை சக வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாதுகாப்புப் படை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதற்கு முன்னதாக புல்வாமா மாவட்டத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை பாகிஸ்தான் உஷார்படுத்திய நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.