தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அம்பேத்கரின் வீட்டின் மீதான தாக்குதல் அரசியலமைப்பின் மீதான தாக்குதல் - பாஜக...! - பாஜக மூத்த தலைவர் அமர் சேபிள்

டெல்லி : டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் நினைவு இல்லம் மீதான தாக்குதலை நடத்திய சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜகவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான அமர் சேபிள் வலியுறுத்தியுள்ளார்.

அம்பேத்கரின் வீட்டின் மீதான தாக்குதல் அரசியலமைப்பின் மீதான தாக்குதல் - பாஜக
அம்பேத்கரின் வீட்டின் மீதான தாக்குதல் அரசியலமைப்பின் மீதான தாக்குதல் - பாஜக

By

Published : Jul 8, 2020, 9:06 PM IST

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள தாதர் என்ற பகுதியில் பாபாசாகேப் அம்பேத்கர் வசித்த வீடு அவரது நினைவு இல்லமாக உள்ளது. இல்லத்தின் கீழ்தளத்தில் அருங்காட்சியகம் உள்ளது.

அதில் அவரது நிழற் படங்கள், அவரது கையெழுத்து பிரதிகள், பயன்படுத்திய பொருள்கள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், அம்பேத்கர் நினைவு இல்லத்தில் நேற்றிரவு(ஜூலை.7) நுழைந்த அடையாளந் தெரியாத சமூக விரோதிகள் அந்த வீட்டின் முன்பகுதியை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

மும்பை அம்பேத்கர் இல்லம் சேதப்படுத்தியதற்கு நாடு முழுவதுமுள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முற்போக்கு இயக்கங்கள், திரையுலக பிரமுகர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான அமர் சேபிள் கூறுகையில், "இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவரும், தலித் மக்களின் ஏகத் தலைவருமான அம்பேத்கரின் வீடு மீது தாக்குதல் நடத்தப்படுவது அரசியலமைப்பு மற்றும் தலித்துகளின் அடையாளத்தின் மீதான தாக்குதலாகவே கருதப்படும்.

நான் இதனை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலமைப்பை தந்தவரின் வீடு மீதான தாக்குதல் அரசியலமைப்பு மீதான தாக்குதல், ஜனநாயகம் மீதான தாக்குதல், தலித்துகளின் அடையாளத்தின் மீதான தாக்குதல். இதைச் செய்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுவே எங்கள் கோரிக்கை.

மகாராஷ்டிராவில், தலித்துகள் மீதான வன்முறை சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடந்து வருகின்றன. அதனை பாபா சாகேப் அம்பேத்கரின் இல்லம் மீதான (ராஜக்ரு) தாக்குதல் அம்பலப்படுத்தியுள்ளது என்றார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்யுமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details