கர்நாடக மாநிலம் பெங்களுருவில் கடந்த 2017ஆம் ஆண்டு கௌரி லங்கேஷ் என்ற பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டவராக குற்றஞ்சாட்டப்படும் ரிஷிகேஷ் தேவ்திகரை மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு காவலர்கள் கடந்த மாதம் ஜார்க்கண்ட் தன்பாத் என்ற பகுதியில் கைதுசெய்தனர்.
மும்பையை அடுத்துள்ள நாலசோபரா பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு கையெறிக் குண்டுகள், வெடிப்பொருட்கள், நாட்டுத் துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இந்து பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு காவலர்கள் கூறும்போது, “இந்த இயக்கத்தினர் 2017ஆம் ஆண்டு புனேவில் நடைப்பெற்ற சன்பர்ன் மேற்கத்திய இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனாலும் இந்த திட்டம் நிறைவேறவில்லை” என்றனர்.
கௌரி லங்கேஷ் கொலை வழக்கு: ரிஷிகேஷ் தேவ்திகருக்கு நீதிமன்ற காவல் - நாலசோபரா ஆயுதக்கடத்தல் வழக்கு
மும்பை: கர்நாடக பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவராக குற்றஞ்சாட்டப்படும் ரிஷிகேஷ் தேவ்திகரை வருகிற 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கௌரி லங்கேஷ் கொலை வழக்கு: ரிஷிகேஷ் தேவ்திகருக்கு நீதிமன்ற காவல்