தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா மீது அணுகுண்டு போர் நிகழ்த்தப்படும் - பாக். அமைச்சர் மிரட்டல் - Sheikh Rashid Ahmed, Minister of Pakistan said

இஸ்லாமாபாத்: இந்தியா மீது அணுகுண்டு போர் நிகழ்த்தப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாக். அமைச்சர்

By

Published : Sep 3, 2019, 8:49 AM IST

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதிலிருந்து இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷித் அகமத், "எங்களிடம் 125 - 250 கிராம் அணுகுண்டு உள்ளது. அது இந்தியாவின் குறிப்பிட்ட பகுதிகளில் வைத்து வெடிக்கப்படும்.

இந்தியா இரண்டு தவறுகளை செய்துள்ளது. ஒன்று அணு ஆயுத சோதனை நடத்தியது. இரண்டாவது காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை நீக்கியது" என்றார்.

இவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக, இந்தியா மீது பாகிஸ்தான் அக்டோபர் மாதம் போர் நிகழ்த்தும் என தெரிவித்திருந்தார்.

இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடன் பதற்றம் நிலவினாலும், அணு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம் என உறுதியளித்துள்ளார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details