தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அட்லஸ் சைக்கிள் நிறுவன உரிமையாளர் மனைவி தூக்கிட்டு தற்கொலை! - Natasha Kapur found dead

புதுடெல்லி: அட்லஸ் சைக்கிள் நிறுவன உரிமையாளர் சஞ்சய் கபூரின் மனைவி நடாஷா கபூர் தனது இல்லத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Natasha Kapur
Natasha Kapur

By

Published : Jan 23, 2020, 2:26 PM IST

அட்லஸ் சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சய் கபூரின் மனைவி நடாஷா கபூர் (57). நேற்று (ஜன.22) டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர் உயிரிழந்த இடத்தில் கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நடாஷாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று இன்னமும் தெளிவாகக் கண்டறியப்படவில்லை.

நடாஷாவின் மகன் செல்போனில் நடாஷாவை தொடர்பு கொண்டுள்ளார். இதற்கு அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக வீட்டிற்குச் சென்று பார்க்கும்போது, நடாஷா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

உடனடியாக அவரை மீட்ட அவரது உறவினர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: யுபிஎஸ்சியில் தோல்வி - மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details