2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 58 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டது.
அந்த அமைச்சரவையில் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளான சிரோன்மணி அகாலி தளம், சிவ சேனா, லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை தலா ஒரு இடம்பெற்றிருந்தன.
பின்னர், அந்தக் கூட்டணியிலிருந்து 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிவ சேனா (அரவிந்த் சாவந்த் - கனரக தொழில்துறை அமைச்சர்) விலகியது. அண்மையில் நிறைவேற்றப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து சிரோன்மணி அகாலிதளம் (ஹர்சிம்ரத் கவுர் பாடல் - உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சர்) விலகிக்கொண்டது.
இந்நிலையில், என்.டி.ஏ கூட்டணியிலிருந்து அங்கம் வகித்த லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் உயிரிழந்ததை அடுத்து தற்போது கூட்டணி கட்சியின் ஒன்றிய ஆய அமைச்சரவை பங்கேற்பு சுழியமாகியுள்ளது.